Translate

Wednesday, October 23, 2013

thalaiyar falls or rat tail falls (தலையார் அருவி, எலிவால் அருவி) falls i...

தலையார் நீர்வீழ்ச்சி


இதனை எலி வால் நீர்வீழ்ச்சி என்றும் அழைக்கின்றனர். இந்தியாவின் மிக உயர்ந்த நீர்வீழ்ச்சிகளில் இதுவும் ஒன்று (தமிழ்நாட்டின் உயரமான அருவி 975அடி). ஒட்டுமொத்தமாக இந்திய அளவில் இந்த அருவி 9வது உயரமான அருவியாகும். மேலிருந்து கீழாக ஒரே அருவியாக (Single Drop) விழும் அருவிகளில் 3வது உயரமான அருவியாகும்.முதல் இரண்டு இடங்களையும் மேகாலயா மாநிலத்தில் உள்ள இருஅருவிகள் (Nohkalikai Falls - 1099ft ; Nohsngithiang Falls - 1033ft) பெறுகின்றன.

இந்த அருவி எலி வால் நீர்வீழ்ச்சி என்று பரவலாக அழைக்கப்பட்டாலும், உண்மையில் இந்த அருவி "horsetail type waterfalls" (குதிரை வால் நீர்வீழ்ச்சி) என்ற வகைப்பாட்டின் கீழ் வருகின்றது.

இந்த அருவியின் தலைப்பகுதியில் உயரம் குறைந்த நடுவில் வழிவிடப்பட்ட சுவர் ஓன்று கட்டப்பட்டுள்ளது. தலையாரில் நீர்வரத்து குறைவாக வரும்போதும், அருவிக்கு அழகான தோற்றத்தை ஏற்படுத்த இந்த சுவர் கட்டப்பட்டிருக்கலாம். எனவே அருவியின் அழகிய தோற்றத்திற்கு இந்த சுவரும் ஒரு காரணம்.

கொடைக்கானல் செல்லும் சுற்றுலா பயணிகள் காட்ரோட்டிலிருந்து கொடைக்கானல் செல்லும் வழியில் டம்டம் பாறை என்ற இடத்தில் இருந்து இந்த அருவியை ரசிக்கலாம்.



Monday, October 21, 2013

mist in kodaikanal hill road (பனி மறைக்கும் கொடைக்கானல் மலைப்பாதை)


பனி மறைக்கும் கொடைக்கானல் மலைப்பாதை

பனி ஒரு புகைபோல் படர்ந்திருக்க,வாகனங்கள் முகப்பு விளக்கினை பயன்படுத்தியே பயணித்தன. இந்த பனியின் நடுவே இருசக்கர வாகனத்தில் பயணித்தது ஒரு இனிமையான அனுபவம். அடிப்படையில்  இது எங்களுக்கு திட்டமிடப்படாத பயணம் இருப்பினும் கொடைக்கானலில் நிலவிய இனிமையான தட்ப வெப்ப சூழல், எங்களுக்கு அருமையான பயண அனுபவத்தை தந்தது.

silver falls to lake (kodaikanal)