லேம்ப்ஸ் ராக்(Lamb's Rock) எனும் இந்த சுற்றுலாதலம் நீலகிரி மாவட்டம் குன்னூரில் இருந்து சுமார் 6 km தொலைவில் உள்ளது. சுற்றுலாப்பயணிகள் பார்க்க வேண்டிய பகுதி இது. கேப்டன் லேம்ப்ஸ் என்பவர் இந்த மலைச்சரிவினை காண பாதை ஏற்படுத்தியதால் அவருடைய பெயரிலேயே இந்த மலைப்பகுதி அழைக்கப்படுகிறது. சுற்றுலாப்பயணிகள் வாகனங்களை விட்டு இறங்கியதும் வனப்பகுதியில் சிறிய நடைபயணத்திற்கு பிறகு அங்கு அமைக்கப்பட்டுள்ள பார்வை தளத்தை (view point) அடையலாம். வனப்பகுதியில் நடப்பதற்கு கற்களால் படிகட்டுகள் போன்ற பாதை உள்ளது. சுற்றுலா பயணிகள் பாறை முனைப்பகுதியில் புகைப்படம் எடுத்துகொள்ளும் ஆர்வத்தில் ஆபத்தான முயற்சிகள் செய்யாமல் இருப்பது நல்லது.
No comments:
Post a Comment