Translate

Sunday, December 15, 2013

papanasam karayar dam boating, banatheertham falls (full lenth video), t...


பாபநாசம் காரையார் அணை, திருநெல்வேலியிலிருந்து சுமார் 50 கிமீ தொலைவில் உள்ளது. இந்த அணைக்கு சுற்றுலா செல்லும் பயணிகளின் வாகனங்கள், அணைக்கு சிறிது முன்னதாக வனத்துறையால் தடுக்கப்படுகிறது. அதன் பிறகு அணையை சென்றடைய வனத்துறையின் வாகனத்தை பயன்படுத்திகொள்ளலாம் அதற்கு சிறிய கட்டணம் வசூலிக்கப்படுகிறது. சிறிய தொலைவே என்பதால் அணைக்கு நடந்தே செல்லலாம், அதுவே இனிமையான அனுபவத்தை தரும். அணையில் பெரும்பான்மையாக நீர் நிரம்பி இருக்கும்போது அணை காண்பதற்கு கண்கொள்ளா காட்சியாக இருக்கும்.

அணையை ரசித்த பிறகு பாணதீர்த்த அருவிக்கு செல்ல அணையினுள் படகில் 15 நிமிடம் பயணிக்க வேண்டியுள்ளது. படகினை தனியாகவும் வாடகைக்கு எடுத்து கொள்ளலாம்.143 அடி உயரமுள்ள அணை  முழுமையாக நிரம்பியிருக்கும் போது அதில் படகில் பயணிப்பது த்ரில்லான அனுபவம். படகு ஓட்டுனர் மறுகரையில் அருவிக்கு அருகே பயணிகளை இறக்கிவிடுகிறார். இந்த அருவி களக்காடு முண்டந்துறை புலிகள் சரணாலயத்திற்கு உட்பட்ட பகுதியில் அமைந்துள்ளது. அருவி பகுதியில் இருப்பதற்கு பயணிகளுக்கு அனுமதிக்கப்பட்ட கால அளவு 1மணி நேரம் அதற்குள் பயணிகள் படகிற்கு திரும்பிவிட வேண்டும்.

அணையின் மறுகரையை நெருங்கும்போதே ஆர்பரித்து கொட்டும் அருவியை காண முடிகிறது. அது ஒரு அற்புதமான காட்சி. அணையின்  மறுகரையில் இறங்கியதும் சிறிது தூர நடைபயணத்திற்கு பிறகு அருவியை அடையலாம்.




கூடுதல் வீடியோ பதிவுகளுக்கு:
Click here for : more papanasam dam video

No comments:

Post a Comment